
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணா’ படத்தின் டிக்கெட் முன்பதிவு தசரா பண்டிகையை முன்னிட்டு தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இரண்டு பாகங்களாக உருவாகும் இத்திரைப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்து வருகின்றனர்.