
காஜல் அகர்வால் மற்றும் ஸ்ரேயாஸ் தல்படே நடிப்பில் வெளியான ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படம், வெளியான 4 நாட்களில் ரூ. 82 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது.
சுமார் ரூ. 30 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், விவசாயத்தில் ரசாயன உரங்களின் பயன்பாடு மற்றும் ஊழல்களை மையமாகக் கொண்டு கடந்த 24-ம் தேதி ரிலீஸ் ஆனது.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியான இப்படம் வசூலில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதால் படக்குழுவினர் நஷ்டத்தை எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.