
இந்தியாவின் முக்கிய டேட்டா சென்டர் மையமாகத் திகழும் சென்னையில், தற்போது 305 மெகாவாட் திறனில் டேட்டா சென்டர்கள் செயல்பட்டு வருகின்றன.
சென்னையில் நடைபெற்ற இஷ்ரே (ISHRAE) மாநாட்டின்படி, இந்தத் திறன் 2032ஆம் ஆண்டுக்குள் சுமார் 7 மடங்கு அதிகரித்து 2.2 ஜிகாவாட்டாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சி தூத்துக்குடி போன்ற இரண்டாம் கட்ட நகரங்களுக்கும் விரிவடைவதுடன், பல்வேறு பொறியியல் துறை இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.