
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட பக்தித் திரைப்படமான 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் சிறப்பு ஆயுத பூஜை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.100 கோடிக்கும் அதிகமான மெகா பட்ஜெட்டில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம் ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது.
இப்படம் வரும் நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உலக முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.