
ஆகஸ்ட் 12 முதல் 31-ம் தேதி வரை வினாடிக்கு 21,413 கன அடி வீதம் நீர் திறக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.
கர்நாடக அணைகளில் 77.35 டி.எம்.சி நீர் இருப்பு இருந்தும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 31.74 டி.எம்.சி நீரில் 10.38 டி.எம்.சி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறுவை சாகுபடியைக் காக்க நிலுவையில் உள்ள 21.35 டி.எம்.சி மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான 15.28 டி.எம்.சி என மொத்தம் 36.65 டி.எம்.சி நீரை உறுதி செய்ய தமிழகம் வலியுறுத்தியுள்ளது.