
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், ஆகஸ்ட் 17 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் நடந்த தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டில் பங்கேற்கவில்லை.
2026 சட்டமன்றத் தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியில் ஷாநவாஸ் சமீபகாலமாக கட்சி நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியே இருப்பதாக வி.சி.க சீனியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாள் பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற ஷாநவாஸ், வி.சி.க மாநாட்டில் பங்கேற்காதது குறித்து கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம் கேட்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.