
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தின் போது கத்தார் நாட்டின் மத்தியஸ்தத்துடன் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பில், ராஜதந்திரத்தை மீண்டும் முன்னெடுப்பதற்காக ஈரானின் நிலைப்பாடுகளும் நிபந்தனைகளும் அமெரிக்கத் தரப்பிற்குத் தெரிவிக்கப்பட்டன.
கடற்படை முற்றுகை மற்றும் பொருளாதார பயங்கரவாதம் உள்ளிட்ட அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஈரான் நிபந்தனை விடுத்துள்ளது.