
நாட்டின் தொழில்துறை வளர்ச்சி முந்தைய மாதத்தோடு ஒப்பிடும்போது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 8 சதவீதம் உயர்ந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்தி துறை வளர்ச்சி 9 சதவீதமாகவும், மின் மற்றும் எரிவாயு வினியோக துறை 12.30 சதவீதமாகவும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களில் தொழில்துறை உற்பத்தி குறியீடு 6.70 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.