
சீனாவின் ஜினான் நகரில் நடைபெற்ற கண்காட்சியில், மனித உருவ ரோபோக்கள் பார்வையாளர்களை வரவேற்று வழிகாட்டியாகச் செயல்பட்டு அசத்தின.
இந்த ரோபோக்கள் கண்காட்சி அரங்கின் அம்சங்களை விளக்கியதுடன், செய்தியாளருடன் கைகுலுக்கி வரவேற்ற நிகழ்வும் பார்வையாளர்களைக் கவர்ந்தது.
கண்காட்சி அரங்கில் மனித உருவ ரோபோக்கள் ஒருங்கிணைந்து நடனமாடியது உள்ளிட்ட புதிய தொழில்நுட்பச் செயல்பாடுகள் செய்து காட்டப்பட்டன.