
துபாயில் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 13 வரை நடைபெறும் மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன.
பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் செப்டம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளிலும், இறுதிப்போட்டி செப்டம்பர் 13-ம் தேதியும் நடைபெற உள்ளது.