
மும்பையில் நடைபெற்ற சண்டிகர் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் மும்பை அணியின் வேகப்பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
முதல் இன்னிங்ஸில் 7 ஓவர்கள் வீசிய அவர் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், பேட்டிங்கில் 44 ரன்களும் சேர்த்தார்.
துஷார் தேஷ்பாண்டேவின் அபாரமான பந்துவீச்சால் சண்டிகர் அணி தனது முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்குச் சுருண்டது.