
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அக்டோபர் 15ஆம் தேதி முதல் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் இரண்டு நாட்களுக்குள் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விலகி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது.