
டிஜிட்டல் பண மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனவரி 1, 2027 முதல் ரூ.25,000 வரை இழப்பீடு வழங்கும் புதிய விதியை ரிசர்வ் வங்கி (RBI) அறிமுகப்படுத்த உள்ளது.
மோசடி நடந்த 5 நாட்களுக்குள் வங்கி அல்லது 1930 என்ற தேசிய இணையக் குற்றப் புகார் இணையதளத்தில் புகாரளித்தால், ரூ.29,412 வரையிலான இழப்பிற்கு 85% வரை இழப்பீடு கிடைக்கும்.
உள்நாட்டு மோசடி புகார்களை 45 நாட்களுக்குள்ளும், எல்லை தாண்டிய வழக்குகளை 60 நாட்களுக்குள்ளும் தீர்க்க வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என RBI உத்தரவிட்டுள்ளது.