
ஜூன் மாத தரவுகளின்படி, இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 48 சதவீதமாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
நடப்பு ஆண்டில் ஜூன் மாதம் இந்தியா இறக்குமதி செய்த 18.2 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயில், 8.7 மில்லியன் மெட்ரிக் டன் ரஷ்யாவிடமிருந்து பெறப்பட்டுள்ளது.
ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்க அமெரிக்க செனட் சபை மசோதா நிறைவேற்றியுள்ளது இந்தியாவிற்கு சவாலாக அமைந்துள்ளது.