
அவிநாசியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி சபரிஷா, மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் ஈட்டி எறிதலில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
தட்டெறிதல் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியுள்ள சபரிஷா, கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
பத்தாம் வகுப்பில் உடற்கல்வி ஆசிரியர் அளித்த ஊக்கமே தனது வெற்றிக்குக் காரணம் என்று தெரிவித்துள்ள சபரிஷாவை, பள்ளி ஆசிரியர்களும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.