
நவம்பர் மாதம் நுங்கம்பாக்கத்தில் நடைபெறவுள்ள சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்-2026 போட்டிகளை நடத்த முதல்வர் விஜய் ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அமிர்தராஜ் தலைமையிலான குழுவினர் முதல்வரைச் சந்தித்ததைத் தொடர்ந்து இந்த நிதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த சர்வதேச அளவிலான போட்டிகள் மூலம் தமிழகத்தை உலக விளையாட்டு மையமாக மாற்றவும், இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.