
மும்பையில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரியானா அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது.
முதல் இன்னிங்சில் சதம் அடித்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியும், 2வது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷீர் கானுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் எலைட் குரூப் டி பிரிவில் மும்பை அணி 20 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.