
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் டெங்கு காய்ச்சலால் நர்மளா (27) என்ற பெண் உயிரிழந்தார்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முகாம் அருகே குப்பைகளை கொட்டி எரிப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாகக் கூறி, அப்பகுதி மக்கள் குப்பைகளை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.