
வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் 100 சதவீதம் மானியத்தில் ஐந்து வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஊரகப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 30,000 தகுதிவாய்ந்த நபர்கள் இதன் மூலம் பயனடைவர்.
இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 2026-27ஆம் நிதி ஆண்டிற்கு 109.75 கோடி ரூபாய்க்கான நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு ஆணையிடப்பட்டுள்ளது.