
மேற்காசிய பகுதியில் நிலவும் பதற்ற சூழலைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவின் ரியாத்துக்கான விமான சேவையை அக்டோபர் 31 வரை இண்டிகோ ரத்து செய்துள்ளது.
ஜெட்டா, தம்மாம் மற்றும் மதீனா நகரங்களுக்கான விமான சேவைகளும் அக்டோபர் 27 வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட விமானங்கள் குறித்து பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதோடு, இணையதளத்தில் தற்போதைய நிலையை சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.