
ஐரோப்பாவின் முக்கிய வாழ்வாதாரமான டான்யூப் நதியின் நீர்மட்டம் 23 செ.மீ. ஆக சரிந்ததால், ஹங்கேரி மற்றும் ருமேனியாவில் அணுமின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
நதி வறட்சியால் சரக்கு மற்றும் சுற்றுலா கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளதோடு, பல கப்பல்கள் மணல் திட்டுகளில் சிக்கியுள்ளன.
வற்றிய நதிப்படுகையில் இரண்டாம் உலகப் போர் காலத்து வெடிகுண்டுகள் மற்றும் பழைய போர்க்கப்பல்களின் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.