
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென அதிகரித்திருப்பது இந்திய பொருளாதாரத்திற்கு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது. செப்டம்பரில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 28.66% உயர்ந்து 116.04 டாலராக உள்ளது.
இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் பெரும்பகுதி இறக்குமதி செய்யப்படுவதால், விலை உயர்வு இறக்குமதி செலவை அதிகரித்து, ரூபாய் மதிப்பிலும் அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும், போக்குவரத்து மற்றும் உற்பத்தி செலவுகளும் அதிகரிக்கும்.
அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மையும் இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்தியாவின் GDP வளர்ச்சி 7.8% ஆக வலுவாக உள்ளது.