தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ரூ.986 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் ராக்கெட் ஏவுதளத்தை இயக்கவும் பராமரிக்கவும் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்த ஏவுதளம் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரோ தொழில்நுட்ப உதவிகளை மட்டும் வழங்கும் என இன்-ஸ்பேஸ் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.