
மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில், சினிமா வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஸ்பெயினில் ஊபர் டிரைவராகப் பணியாற்ற விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்குச் சென்று ஊபர் டிரைவராக மாறுவது குறித்து தனது மனைவி நஸ்ரியாவிடமும் பேசி ஒப்புதல் பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மக்களுக்கு தன் மீது அலுப்பு ஏற்படும் பட்சத்தில் அமைதியாக பார்சிலோனா சென்று தனது நீண்ட தூர டிரைவிங் ஆசையை நிறைவேற்றிக் கொள்வேன் என அவர் நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார்.