
அவசியமற்ற விசா விதிமுறைகள் மீறல் மற்றும் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவில் டிரம்பின் இரண்டாவது ஆட்சி காலத்தில் இதுவரை 2.50 லட்சம் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்டில் மட்டும் 1.75 லட்சம் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 2,300 பிறப்பு சுற்றுலா விசாக்களும் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, டிரம்ப் விதித்த எச்1பி விசாவுக்கான கட்டண உயர்வை கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றமும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.