
மேகமலை மற்றும் மாஞ்சோலை வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவும், விடுதிகளை இடித்துத் தரைமட்டமாக்கவும் உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
வனப்பகுதியில் உள்ள 4,600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் குறித்த நிலை அறிக்கையை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறினால் துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும் என எச்சரித்துள்ள நீதிமன்றம், வழக்கு விசாரணையை செப்டம்பர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.