
இத்தாலியின் டொரினோவில் நடைபெற்ற 19-வது சர்வதேச பூமி அறிவியல் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மாணவர்கள் மொத்தம் 9 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
ஆகஸ்ட் 20 முதல் 27 வரை நடைபெற்ற இப்போட்டியில் பங்கேற்ற சௌமிக் மண்டல், 19 ஆண்டு கால ஒலிம்பியாட் வரலாற்றில் மூன்றாவது அதிகபட்ச தனிநபர் தரவரிசையைப் பெற்றுள்ளார்.
இந்தியா சார்பில் பங்கேற்ற நான்கு மாணவர்கள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் தீவிர பயிற்சி பெற்ற பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.