
சென்னையில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் சென்னை மாநகராட்சி 95-வது வார்டு திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியுள்ளார்.
இதற்கு தவெகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தவெக நிர்வாகி உதயகுமார் எஸ்பிளனேட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளனுக்கு விசாரணைக்காக சம்மன் அனுப்பியுள்ளனர்.