
செனகலில் நடைபெறும் யூத் ஒலிம்பிக் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் தான்வி பத்ரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
சீனாவின் இ ஜின் ஜங்குடன் போராடிய தான்வி 21–15, 13–21, 24–26 என்ற செட் கணக்கில் போராடித் தோல்வியடைந்தார்.
இதன் மூலம் யூத் ஒலிம்பிக் பாட்மின்டனில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.