/nakkheeran/media/media_files/2026/10/25/cbe-collector-pavankumar-g-giriyappanavar-school-leave-2026-10-25-22-00-14.jpg)
தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை திங்கட்கிழமை ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் உத்தரவிட்டுள்ளார்.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையானது, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.