
வங்காளதேசத்தின் சிட்டகாங் மாகாணம் காக்ஸ் மாவட்டத்தில் கடற்கரையோரம் அமைந்துள்ள நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் ஓட்டலில் தங்கி இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உள்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.