
கிழக்கு சீனாவில் உள்ள கிங்டாவ் நகர் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வெளிநாட்டுக் கொடி கட்டப்பட்ட சரக்குக் கப்பலில் தீப்பற்றி எரிந்ததில் 20 பேர் உயிரிழந்தனர்.
கப்பல் கட்டும் தளத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றபோது ஏற்பட்ட இந்த தீவிபத்தில், கப்பலில் இருந்த மொத்தம் 42 பேரில் 10-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர் மற்றும் 5 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சீன பிரதமர் ஜி ஜின்பிங், முழுமையான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ள நிலையில், கடலோரக் காவல்படையினர் விசாரித்து வருகின்றனர்.