
கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கியதை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
உயிரிழந்த 41 பேரில் 31 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசு பணி ஆணைகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், தமிழ்நாடு அரசு மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
நீதிபதிகள் பர்திவாலா மற்றும் வினோத் அமர்வு, பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குவதில் உள்ள சிக்கல் குறித்து கேள்வி எழுப்பி, எதிர்மனுதாரர்கள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.