
நத்தத்தில் நடைபெறும் டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது.
திண்டுக்கல் அணியின் விமல் குமார் அதிரடியாக விளையாடி 63 ரன்கள் எடுத்தார், அனுராக் ராஜேஷ் 35 ரன்களும், ஹன்னி சய்லி 27 ரன்களும் சேர்த்தனர்.
171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் அணி களமிறங்குகிறது.