
உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யா 36 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 172 ட்ரோன்கள் மூலம் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் முக்கிய எரிசக்தி கட்டமைப்புகள் மற்றும் வடக்கு பாலம் கடுமையாக சேதமடைந்துள்ளன, இதன் காரணமாக மின்சார விநியோகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், உக்ரைனின் குளிர்காலத்திற்கு முன்பாக நாட்டின் எரிசக்தி கட்டமைப்புகளை முடக்கும் நோக்கில் ரஷ்யா செயல்படுவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.