
2031-ஆம் ஆண்டிற்குள் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) திறன் பயிற்சி அளிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் AI மற்றும் இயந்திரவழி கற்றல் (ML) புதிய தொழிற்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டு, 5 ஆண்டுகளில் 24,000 மாணவர்கள் பயிற்சி பெற வழிவகை செய்யப்படும்.
‘வெற்றித் திறன் பயிற்சித் திட்டம்’ மூலம் நடப்பாண்டில் 12 லட்சம் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஒரு லட்சம் வேலையில்லா இளைஞர்களுக்குத் தொழிற்துறை சார்ந்த பயிற்சிகள் ரூ.150 கோடி செலவில் வழங்கப்படும்.