கணையம், சிறுகுடல், பித்த நாளங்களில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பை சீராக்க 'விப்ள் செயல்முறை' எனும் நவீன சத்திரசிகிச்சை தற்போது பலனளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சிக்கலான சத்திரசிகிச்சை, கணையத்தில் டிஸ்டல் பான்கிரியாடெக்டமி, டோட்டல் பான்கிரியாடெக்டமி, பித்த நாளத்தை அகற்றும் சத்திரசிகிச்சை ஆகியவற்றை ஒரே அமர்வில் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்படுகிறது.
நான்கு முதல் பன்னிரண்டு மணி நேரம் வரை நீடிக்கும் இந்த சத்திரசிகிச்சை, கணைய புற்றுநோய், நீர்க்கட்டிகள், பித்த நாள புற்றுநோய் உள்ளிட்ட பல பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.