Education
6-ம் வகுப்பு மும்மொழி கொள்கை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

6-ம் வகுப்பு மும்மொழி கொள்கை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

Hindu Tamil Thisai55m
THE BRIEF
1

நடப்பு கல்வியாண்டில் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கையில் இருந்து ஒருமுறை மட்டும் விலக்கு அளிப்பது தொடர்பான ஆலோசனையை விரைவுபடுத்துவதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2

தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் நடைபெற்ற விசாரணையில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

3

மும்மொழிக் கொள்கை அமலாக்கத்தை எதிர்த்த வழக்கை வரும் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், சிபிஎஸ்இ தனது அமலாக்க முறையைச் சிறப்பாகச் சீரமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.