
இந்திய நேரப்படி நேற்று இரவு 8 மணி முதல் பல பயனர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் எந்த முன்னறிவிப்பும் இன்றி 24 மணி நேர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
உலகளவில் 300 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப் தளத்தில், பாதுகாப்பு காரணங்களுக்காக கணக்குகள் முடக்கப்படுவதாக மெட்டா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
டவுன் டிடெக்டர் தளத்தில் பயனர்கள் இந்தச் சிக்கலை உறுதி செய்துள்ள நிலையில், தவறாக முடக்கப்பட்ட கணக்குகளை விரைவாகச் சரிசெய்ய முயற்சிப்பதாக நிறுவனம் கூறியுள்ளது.