
இந்தியாவின் எஃப்சிஆர்ஏ சட்டத்திருத்தம் குறித்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரைலி மூர் தெரிவித்த விமர்சனங்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சட்ட விவகாரங்கள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் என்றும், இது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் இந்திய நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உண்டு என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
தேவாலயங்கள் மற்றும் மதத் தொண்டு நிறுவனங்களை அரசு கையகப்படுத்த வழிவகுக்கும் என ரைலி மூர் கடந்த செவ்வாயன்று சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்தை இந்தியா நிராகரித்துள்ளது.