
நடிகர் அஜித்குமாரின் கார் ரேஸிங் முயற்சிகளை மையமாகக் கொண்ட 'கிளாடியேட்டர்ஸ்' ஆவணப்படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் விஜய் இயக்கும் இந்த ஆவணப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தனது 'கோல்டன் ட்ராபி ஃபிலிம் புரொடக்ஷன்' மூலம் தயாரிக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்த ஆவணப்படத்தில் ஒளிப்பதிவாளர்கள் ரிப்ஹு சர்மா, கபிலன் விநாயக் மற்றும் படத்தொகுப்பாளர் ஆண்டனி ஆகியோர் பணியாற்றுகின்றனர்.