
பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கண் புற்றுநோய் சிகிச்சைக்குத் தேவையான 'ருதேனியம்-106' ஐசோடோப்பை உள்நாட்டிலேயே தயாரிக்க முடியும்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தால் ரூ. 5-10 லட்சம் வரை செலவாகும் இந்த ஐசோடோப்பை, இந்தியாவிலேயே தயாரிப்பதன் மூலம் வெறும் ரூ. 50 ஆயிரத்தில் சிகிச்சை அளிக்கலாம்.
மத்திய அணுசக்தி துறை செயலாளர் அஜித்குமார் மொஹந்தி, கோவை பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரி விழாவில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.