
பைசா பஜார் நிறுவனம் தனது தொழில்நுட்பக் கட்டமைப்பில் 86 சதவீத நிரலாக்க மொழிகளை (கோட்) செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எழுதுவதாக அறிவித்துள்ளது.
இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பொறியாளர்களின் நேரத்தை மிச்சப்படுத்தி, சிக்கல் தீர்த்தல் மற்றும் புத்தாக்கப் பணிகளில் அதிக கவனம் செலுத்த முடிவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்காக அல்ல, மாறாக வேலையை விரிவாக்கம் செய்யவும் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் மட்டுமே என்று தலைமை தொழில்நுட்ப அதிகாரி முகேஷ் ஷர்மா விளக்கினார்.