/nakkheeran/media/media_files/2026/09/18/705-2026-09-18-22-03-06.jpg)
பொங்கல் பண்டிகையையொட்டி அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலைகளுக்கான உற்பத்திக் கூலியை உயர்த்தக் கோரி கைத்தறித் துறை அமைத்துள்ள ஐவர் குழுவிடம் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மனு அளித்துள்ளது.
நிகழாண்டு வேட்டியின் நீளம் குறைக்கப்பட்டிருப்பதுடன் உற்பத்தி அளவீடுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் ஒரு தறியில் நாளொன்றுக்கு 16 முதல் 18 வேட்டிகள் மட்டுமே உற்பத்தி செய்ய முடிவதாகக் கூறப்பட்டுள்ளது.
மின் கட்டணம், குடோன் வாடகை மற்றும் தொழிலாளர் கூலி உயர்வை கருத்தில் கொண்டு வேட்டி மற்றும் ஜரிகை பார்டர் சேலைகளுக்கு முறையே புதிய கூலி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.