
இந்தியாவில் நடைபெறவுள்ள பல்வகை கிரிக்கெட் தொடருக்காக 16 பேர் கொண்ட ஆஸ்திரேலிய யு-19 ஆண்கள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் இந்திய யு-19 அணிக்கு எதிராக மூன்று 50 ஓவர் போட்டிகளும், இரண்டு 4 நாள் போட்டிகளும் ராஜ்கோட் மற்றும் அகமதாபாத் மைதானங்களில் நடைபெறுகின்றன.
வேகப்பந்து வீச்சாளர்களான வில் பைரம் மற்றும் கேசி பார்ட்டன் ஆகியோர் அணியை வழிநடத்த உள்ள நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் படேல் அணியில் இடம்பிடித்துள்ளார்.