
கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் (19), சக மாணவர்களுடன் ஏற்பட்ட மோதலில் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
போதைப்பொருள் புகார் தொடர்பாக விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட அமுதன், நண்பர் அறையில் தங்கியிருந்தபோது 20 பேர் கொண்ட கும்பலால் இரும்பு ராடு மற்றும் கற்களால் தாக்கப்பட்டார்.
சம்பவம் குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி தெரிவித்தார்.