
துருக்கியின் கிழக்கு பகுதியில் பூமிக்கு அடியில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவான பயங்கர நில அதிர்வு ஏற்பட்டது.
திடீரென கட்டிடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த பொதுமக்கள் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளோ உயிர் சேதங்களோ ஏற்படவில்லை என ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.