
நாசாவால் கடந்த 2004-ம் ஆண்டு விண்வெளி ஆய்வூக்காக அனுப்பப்பட்ட 1½ டன் எடையுள்ள 'ஸ்விப்ட் அப்சர்வேட்டரி' தொலைநோக்கி கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வேகமாக இறங்கி வருகிறது.
இதன் பெரும்பாலான பகுதிகள் வளிமண்டல உராய்வினால் எரிந்து சாம்பலாகிவிடும் என அமெரிக்க விண்வெளிப் படை கணித்துள்ளது.
எனினும், இதன் டங்ஸ்டன் உலோகப் பகுதிகள் மற்றும் கண்ணாடி உடைந்த பாகங்கள் கடலில் விழக்கூடும் என்றும், இந்தியா உள்ளிட்ட பகுதிகள் அச்சுறுத்தல் மண்டலத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.