
கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரரைத் தாக்கிய அர்ஜென்டினா வீரர் பரதேஷுக்கு, சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிபா 10 போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது.
இந்த ஒழுங்கீன நடவடிக்கையைத் தொடர்ந்து பரதேஷுக்கு ரூ.86 லட்சம் அபராதமும், விதிமுறைகளை மீறியதற்காக அர்ஜென்டினா கால்பந்து அணிக்கு ரூ.3 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றிய நிலையில், மைதானத்தில் நடந்த மோதல் தொடர்பாக பிபா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.