
செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் அரசுப் பள்ளிகளில் காலை உணவில் பல்லி விழுந்த சம்பவங்களைத் தொடர்ந்து, மாணவர்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
சுகாதார ஆய்வுகள் மற்றும் தரப் பரிசோதனைகள் செய்யாமல் நிர்வாகச் சீர்கேடு நடப்பதாகவும், குழந்தைகளின் உயிருடன் விளையாடுவதை முதல்வர் நிறுத்த வேண்டும் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தரமான சிகிச்சை அளிப்பதோடு, அலட்சியத்திற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.